ஸ்பெயினில் பொது மக்களின் உளவியல் ரீதியிலான பிரச்சினைகளை போக்க, "க்ரையிங் ரூம்" முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
செயற்கை முறை வாழ்கையால் மக்கள் அதிக மன அழுத்தம், இறுக்கம், சோர்வு மன உளைச்சல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட நபரை க்ரையிங் ரூம் என்ற அறையில் அடைத்து, தான் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டு பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியில் ரீதியிலான பிரச்சினைகள் குறைவதாக மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.