ஸ்பெயினில் தஞ்சமடைய முயன்று கடலில் தத்தளித்த 44 அகதிகளை மீட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் படகில் தத்தளித்த 45 பேரை மீட்ட மீட்பு குழுவினர் அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், வந்தவர்கள் ஆப்பிரிக்காவின் Maghreb பகுதியைச் சேர்ந்தவர்களை என்பதை தவிர வேறெந்த தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.