காய்கறிகள் விலைஉயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்துக் காய்கறிகளும் கிலோ 10 ரூபாய் முதல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மழை வெள்ளம் போன்றவை இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
காய்கறிகளுடன் சமையல் எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால், இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.