டெல்லி அருகே சிங்கூ எல்லையில் நடைபெற்ற படுகொலை தொடர்பாக தேடப்பட்ட இரண்டாவது முக்கிய நபர் போலீசாரிடம் சரண் அடைந்தார். நாராயண் சிங் என்ற அந்த நபரை அமிர்தசரஸ் போலீசார் அமர்கோட் கிராமத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது சிலர் அவருக்கு மாலை போட்டு காலில் விழுந்து ஆசி வாங்கினர்
லக்பீர் சிங் என்பரின் உடல் கோரமான முறையில் ஒரு கை மற்றும் கால் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் பேரிகாடில் தொங்கவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொடூர கொலை தொடர்பாக நிஹாங்ஸ் என்ற சீக்கியர் மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவரை போலீசார் முதலில் கைது செய்தனர். மேலும் இருவரைப்பிடித்து விசாரித்து வருகின்றனர். சீக்கியர்களின் புனித நூலை இழிவுபடுத்தியதால் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.