பொது இடங்கள், நீர்வழி தடங்களில் குப்பை, கட்டிட கழிவு கொட்டினால் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பையை வீசுபவர்களுக்கு, 500 ரூபாய் அபராதமும், தரம் பிரிக்கப்படாத குப்பையை கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு ரூபாய்100 அபராதமும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1,000 ரூபாய் அபராதமும், பெருமளவு குப்பையை உருவாக்குபவர்களுக்கு 5,000 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
பொது இங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டுபவர்களுக்கு 1 டன் வரை ரூபாய் 2,000 அபராதமும், 1 டன்னிற்கு மேல் 5,000 ரூபாய் அபராதமும், தோட்ட கழிவுகள், மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், வசூலிக்கப்படும், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது