பெரு நாட்டில் போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு சோதனையில் 5 டன் போதை பொருள் கைப்பற்றப்பட்டன.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கைபற்றப்பட்ட கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்களின் கள்ளச் சந்தை மதிப்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர் , அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா., தகவலின் படி, பெரு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில்தான் உலகிலேயே அதிகமாக கொக்கைன் போதை பொருள் தயாரிக்கப்படுகிறது.