வியாழன் கோளை சூழ்ந்துள்ள வின்கற்களை ஆராய நாசா நிறுவனம் லூசி (Lucy) என்கிற விண்கலத்தை ஏவியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் (Cape Canaveral Air Force Station) விமானப்படை தளத்தில் இருந்து அட்லஸ் 5 (Atlas V) ராக்கெட் மூலம் லூசி (Lucy) வின்கலம் ஏவப்பட்டது.
வியாழன் கோளை சூழ்ந்துள்ள விண்கற்களை ஆராய்வதன் மூலம், 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய குடும்பம் எப்படி தோன்றியது என்பதை கண்டறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணில் 12 ஆண்டுகள் பயணிக்க உள்ள லூசி விண்கலத்தின் மூலம் வியாழனை சூழ்ந்துள்ள 7 வெவ்வேறு வின்கற்களை ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
4 கிலோமீட்டர் முதல் 225 கிலோமீட்டர் வரை விட்டளவு கொண்ட இந்த விண்கற்களை ஆராய்வதன் மூலம் சூர்ய குடும்பத்தின் தோற்றத்தை மட்டுமின்றி, பூமியில் உயிரினங்கள் தோன்றியது எப்படி என்பதை கூட கண்டறிய வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.