லஷ்கரே தொய்பாவின் முக்கிய கமாண்டரும், தேடப்படும் டாப் 10 தீவிரவாதிகளில் ஒருவனுமான உமர் முஷ்டாக் காண்டே, பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுற்றி வளைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர் பாகட்டில் இரண்டு போலீசாரை கொன்றது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் தொடர்புடைய இவன், தேடப்படும் தீவிரவாதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தேடப்பட்டு வந்தான்.
இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்போர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், துப்பாக்கி முனையில் இவன் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் ஜம்மு காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது. புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளை பிடிப்பதற்கான என்கவுன்டர் தொடர்ந்து நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.