பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான 'ஆன்லைன்' முன்பதிவு துவங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்திற்குள்ளேயே 2022ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியான புத்தாண்டிற்கும், 2022 ஜனவரி 14ம் தேதி நடக்கும் மகரஜோதி தரிசத்திற்குமான முன்பதிவு முற்றிலும் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.