அமெரிக்காவின் ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 1 ஆக பதிவாகியிருந்து.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளி 2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நாலேஹூ என்ற இடத்தை மையமாகக் கொண்டு 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலுக்குள் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விபரங்களும் வெளியாகவில்லை.