ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களை ஒடுக்க அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவையில்லை என தாலிபான் தெரிவித்துள்ளது.
தீவிரவாதம், வெளிநாட்டவர்களை ஆப்கானிலிருந்து பத்திரமாக அனுப்புவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா மற்றும் தாலிபான் பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத்தினரை தாலிபான் தனியாக சமாளிக்கும் என தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் கிழக்கு ஆப்கானில் வலுப்பெற தொடங்கிய ஐ.எஸ்., மற்றும் அதை தொடர்புடைய இயக்கம், சமீபத்தில் Kunduz நகரில் 49 பேர் பலியாக காரணமாக இருந்த மசூதி குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.