புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் பிரதமர் மோடி உலகிற்கே முன்னுதாரணம் என டென்மார்க் பிரதமர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள Mette Frederiksen-க்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் டென்மார்க் பிரதமரை, மோடி வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அறிவியத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தொழில்முனைவு திறன் மேம்பாடு, கல்வி நிலையங்கள் சார்ந்த ஒத்துழைப்பு உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கூட்டாக இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியா தங்களது நெருங்கிய கூட்டாளி என டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைத் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பையும் டென்மார்க் பிரதமர் சுட்டிக்காட்டினார்.