அவதார் திரைப்படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் திரைப்படம் வசூலில் உலக அளவில் சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
இதனையடுத்து அவதார் படத்தின் 2ம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.