மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பல்வேறு பேரழிவுகளுக்கு எதிராக செயல்படுவதற்காக ஆயிரத்து 800 பேர் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய துணை ராணுவ அமைப்பான மத்திய ரிசர்வ் படை, கலவரங்கள், போராட்டங்கள் மற்றும் மாநில காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பேரழிவுகளுக்கு எதிராக செயல்படுவதற்காக புதிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மனிதனால் ஏற்படுத்தப்படும் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.