லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என வருண் காந்தி வலியுறுத்திய நிலையில், பாஜக தேசியச் செயற்குழுவில் இருந்து அவரும், அவர் தாய் மேனகா காந்தியும் நீக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ காட்சியை டுவிட்டரில் பதிவிட்ட வருண் காந்தி, இந்த வீடியோ காண்போர் நெஞ்சை உலுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இன்று மற்றொரு நீளமான வீடியோவை வெளியிட்டுவிட்டு அது தெள்ளத்தெளிவாக உள்ளதாகவும், விவசாயிகள் படுகொலையில் தொடர்புடையோரைக் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்குத் தொடக்கத்தில் இருந்தே வருண் காந்தி ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பாஜக புதிய செயற்குழுவில் மேனகா காந்தி, வருண் காந்தி பெயர்கள் இடம்பெறவில்லை.