வழக்குகளில் இருந்து கவுரவமான முறையில் விடுவிக்கப்பட்டவர்கள் மட்டுமே, பாதுகாப்பு படையிலோ காவல்துறையிலோ சேர தகுதி பெற்றவர்கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசுத்தரப்பு சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், ஆட்கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபருக்கு வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
போதிய சான்றுகள் இல்லாததாலோ சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி விடுவிக்கப்பட்டவர்களோ அரசுப் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெற முடியாது என்றும் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மஹேஸ்வரி அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம்புரிந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில், வழக்கில் தவறான முறையில் தொடர்புபடுத்தப்பட்டதாக நீதிமன்றம் கூறும்போது மட்டுமே அது கவுரவமான விடுதலை என்றும், நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.