பாகிஸ்தானுக்கு இனிமேலும் எந்த உதவியும் செய்யக் கூடாது என அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் அந்நாட்டு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அவர், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முன் பேசினார். தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியபோது பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாத இயக்கங்களுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால் அதற்கு இனிமேல் எந்த உதவியும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கெனவே பாகிஸ்தானுக்குப் பாதுகாப்புத் துறை தொடர்பான உதவிகளை டிரம்ப் நிர்வாகம் நிறுத்திய நிலையில், பைடன் நிர்வாகம் அதை இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.