போர்ப்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயர் இடம்பெறவில்லை.
25 ஆண்டுகளில் முதன்முறையாக ட்ரம்ப் அந்த பட்டியிலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி விளங்கிய டொனால்டு ட்ரம்ப், ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் வெளியிடும் அமெரிக்காவின் டாப் 400 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்து விடுவார்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால், ட்ரம்பின் சொத்து மதிப்பு குறைந்ததால் அந்த பட்டியலில் அவரால் இடம்பிடிக்க இயலாமல் போயுள்ளது. டொனால்ட் ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்களாகும். அதில், இந்த ஆண்டு மட்டும் 600 மில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.