பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்யும் வகையில் ட்விட்டர் நிறுவன சிஇஓ ட்வீட் செய்தது இணையதளவாசிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் பேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலிகள் 7 மணி நேரம் முடங்கியதால், சமூகவலைதளவாசிகள் ட்விட்டருக்கு மொத்தமாக படையெடுத்தனர்.
பேஸ்புக் டவுன் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்த ட்விட்டர்வாசிகள், பேஸ்புக்கை கேலி செய்தும் பதிவிட்டனர். இந்நிலையில், பேஸ்புக் 'இணையதளம் விற்பனைக்கு' என ட்வீட் செய்ய்யப்பட்ட படத்தை பகிர்ந்த ட்விட்டர் சிஇஓ ஜேக் டார்சி, அதன் விலை எவ்வளவு? என பதிவிட்டு கேலி செய்ததை அதிகம் பேர் ஷேர் செய்தனர்.