பயனாளர்களின் பாதுகாப்பை விட இலாபத்தையே முதன்மையாகக் கருதுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சுக்கர்பர்க் மறுத்துள்ளார்.
பேஸ்புக்கின் செயலிகள் இளைஞர்களின் மனநலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளதாக, அதன் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹாகன் குற்றஞ்சாட்டினார். மக்களைத் தொடர்ந்து தக்கவைக்க எதிர்மறை உணர்ச்சிகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் பேஸ்புக் ஊழியர்களுக்கு அதன் தலைவர் மார்க் சுக்கர்பர்க் எழுதியுள்ள குறிப்பில் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விளம்பரம் மூலமே பேஸ்புக் வருமானம் ஈட்டுவதாகவும், தீங்கு விளைவிக்கும் அல்லது ஆத்திரமூட்டும் உள்ளடக்கங்களுக்கு அடுத்துத் தங்கள் விளம்பரம் வருவதை எவரும் விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.