2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.
அனைத்து பக்தர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி, மலை அடிவாரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், உரிய சான்றிதழுடன் வருபவர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.