உத்தரப்பிரதேச அரசு, ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்கிற திட்டத்தின் விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தை நியமித்துள்ளது.
உத்தரப்பிரதேச அரசு பாரம்பரியத் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்னும் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி 75 மாவட்டங்களிலும் பாரம்பரியத் தொழில்களுக்கான தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் விளம்பரத் தூதராகக் கங்கணா ரணாவத்தை நியமித்துள்ளது. அவர் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்தார்.