ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் புத்தம் புதிய ஆப்பிள்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
தினசரி ஆப்பிள்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மொகல் சாலை வழியாக இங்கு வருவது வழக்கம். பூஞ்ச்-காஷ்மீர் இடையே மிகவும் குறுக்குப் பாதையாக இந்த பகுதி கருதப்படுகிறது.
இதனால் ஆப்பிள் தோட்டங்களில் இருந்து பறித்து கொண்டு வரப்படும் நறுமணம் மிக்க புதிய ஆப்பிள்களை இந்தப் பகுதியில் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.மொகல் சாலையைத் திறக்க அனுமதித்த அரசுக்கு நன்றி கூறும் உள்ளூர் மக்கள் ஆண்டுக்கு 12 மாதங்களும் இப்பாதையைத் திறந்துவிடும்படி கோருகின்றனர்