சென்னை மெரினா கடலுக்கு குளிக்கச் சென்று கடல் அலையில் சிக்கி காணாமல் போன பாலிடெக்னிக் மாணவரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல்லை சேர்ந்த மாணவர் கோகுல், சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். நண்பர்களுடன் மெரினாவிற்கு சென்ற அவர், கடலில் குளித்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி கடலில் மூழ்கினார்.
கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிக்காப்டர் மற்றும் கப்பல் மூலமும் மெரினா கடலோர பகுதிகளில் தேடி வருகின்றனர்.