இந்திய ராணுவத்தினர் சீனப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகச் சீனா கூறியுள்ள குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங், இந்தியா நெடுங்காலமாக முன்னோக்குக் கொள்கையைப் பின்பற்றி வருவதும், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டிச் சீனப் பரப்பை ஆக்கிரமித்துள்ளதுமே எல்லையில் நிலவும் பதற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா பெருமளவில் படையினரைக் குவித்துள்ளதுடன், ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாகவும், அதனால்தான் எல்லையில் அமைதி குலைவதாகவும் குற்றஞ்சாட்டினார்.