உலகில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கு முன் இப்போது நிலவி வரும் பனிப்போர் மனநிலையை முதலில் ஒழிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய சீனாவின் ஐ.நா.வுக்கான துணை பிரதிநிதி Geng Shuang, ராணுவ ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஒரு சில நாடுகள், ஆபத்தான அணுசக்தி ஒப்பந்தங்கள் மூலம் வேறு சில நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து மோதலை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை செய்துக்கொண்டதை Geng Shuang மறைமுகமாக குறிப்பிட்டார்.