ரஷ்ய அதிபர் புதினை, துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் சந்தித்தார். அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எஸ்400 வகை ஏவுகனையை வாங்க துருக்கி முடிவு செய்து உள்ளது.
சிரியா போரில் அரசு படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு துருக்கியும் ஆதரவு அளித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுள்ளது.
கொரோனா தனிமைப்படுத்துதலை நிறைவு செய்து உள்ள அதிபர் புதின் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அதிபர் எர்டோகனுடன் அலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.