உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியாக பதிவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக-வி தடுப்பூசிக்கு கொடுத்த ஆர்டர்களை பல பெரிய தனியார் மருத்துவமனைகள் ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசே தடுப்பூசியை இலவசமாக போடுவதால், கோவிஷீல்டை விட 47 சதவிகிதம் விலை அதிகமுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ஆயிரக்கணக்கான டோசுகள் தேங்கிவிட்ட நிலையில், புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அதன் இந்திய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான டாக்டர் ரெட்டிஸ் லேபிடம் அளித்த ஆர்டர்களை கேன்சல் செய்துள்ளன.