காஷ்மீர் ஊரி மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 19 வயதான லஷ்கரே தொய்பா தீவிரவாதி பிடிக்கப்பட்டு அவனிடம் இருந்து, இந்தியாவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்த திட்டமிட்ட பல தீவிரவாத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
பெரிய தாக்குதல் திட்டம் ஒன்றை நடத்தும் திட்டத்துடன் அலி பாபர் பத்ரா என்ற இந்த தீவிரவாதி தனது கூட்டாளியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாகவும்,ராணுவம் அவர்களை தடுத்து பிடிக்க முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவனது கூட்டாளி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலி பாபர் பத்ராவிடம் நடத்திய விசாரணையில், அவன் பாரமுல்லாவில் ஆயுதங்களை போட்டதை ஒப்புக்கொண்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 6 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும், இந்த இருவரையும் தவிர எஞ்சியவர்கள் தப்பித்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.