ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், மூளை வங்கியை அமைக்க, ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் 47 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
இறந்தவர்களின் மூளை மாதிரிகளை சேமித்து வைத்து நரம்பியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதே மூளை வங்கி என அழைக்கப்படுகிறது. இந்த தகவலை புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் முகநூலில் தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு இந்த வங்கியை செயல்படுத்தலாம் எனவும் அதன்பின்னர் அங்கு நடக்கும் ஆய்வுகளை பொறுத்து அது நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பெங்களூருவில் இருக்கும் நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் இந்தியாவின் ஒரே ஒரு மூளை வங்கி செயல்பட்டு நரம்பியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.