ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து டீசலை திருடி விற்பனை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இரவு நேரங்களில் டீசல் திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்ததை அடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், சித்தூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் டீசல் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.