ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஆடுகளுடன் வெள்ளத்தின் நடுவே ஆற்றில் சிக்கிக் கொண்ட விவசாயி, ஆடுகளை மீட்டால் தான் தாம் வெளியே வருவேன் எனக் கூறி அங்கேயே அமர்ந்திருக்கிறார்.
சிம்மாசலம் என்ற அந்த விவசாயி, தனது ஆடுகளை மேய்க்கச் சென்ற போது திடீரென சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து சிக்கிக் கொண்டார். ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டில் ஆடுகளுடன் அமர்ந்து கொண்ட அவர், ஆடுகளை மீட்டால் தான் தாம் வெளியே வருவேன் எனக் கூறி குடைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருக்கிறார்.
இதனால், மீட்பு பணிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் 16 மணி நேரமாக செய்வதறியாமல் நின்றுள்ளனர். மேலும் ட்ரோன் காட்சிகள் மூலம் விவசாயியையும், ஆடுகளையும் கண்காணித்து வருகின்றனர்.