மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்த போது, கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி அவர் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் எம்பியாக இல்லை என்பதால், மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தற்போது போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.