பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது சர்ச் எஞ்சின்- ஆக இருக்கும் கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இணையதள பக்கத்தில் பிரத்யேக டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் 23 ஆவது வயதை குறிக்கும் வகையிலான பிறந்த நாள் கேக்கின் படமும் எல் வடிவிலான மெழுகுவர்த்தியும் இடம் பெற்றுள்ளன.
டெக்னிக்கலாக பார்த்தால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதியே கூகுள் தேடு பொறி நிறுவப்பட்டு விட்டது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அதுவே கூகுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டது.
அதன்பின்னர் கூகுளின் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்ததை குறிக்கும் வகையில் செப்டம்பர் 27 ஆம் தேதி கூகுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.