வங்கக் கடலில் உருவான குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு சனிக்கிழமை மாலை வலுவடைந்து புயலாக மாறியது.
குலாப் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது. இந்த நிலையில் குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 75 கிலோமீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.