89ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மன்மோகன்சிங், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திப்பதாக பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் நல்ல உடல்நலனுடன் வாழ வாழ்த்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நன்கு புரிந்து வைத்துள்ள அவர், அச்சமற்றவராகவும், அறிவாளியாகவும் திகழ்வதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.