இந்தியா - கனடா இடையிலான நேரடி விமான சேவை திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.
ஏப்ரலில் கொரோனா 2ஆம் ஆலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால், மீண்டும் விமானத்தை இயக்க கனடா அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி - டொரொன்டோ இடையே ஏர் இந்தியா, ஏர் கனடா விமானங்கள் திங்கட்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணப்படுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா மூலக்கூறு பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேறு நாடுகள் வழியாக கனடா வருபவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து பெற்ற நெகடிவ் சான்றிதழ்களை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.