பொதுமக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாலும், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதாலும், கொரோனா குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவை தொடர்ந்தால், 3ஆவது அலை ஏற்படாமல் கட்டுக்குள் வைக்க முடியும் என்றார்.
குழந்தைகள் பள்ளிகளை விட மால்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதால் தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதாகவும் சௌம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.