சினிமா குறித்த தரமான புத்தகங்கள் தமிழில் குறைவாக உள்ளன என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.ம.தொல்காப்பியன் எழுதிய 'சினிமா ஒரு காட்சி இலக்கியம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய வெற்றிமாறன், 25 ஆண்டுகளாக சினிமா விமர்சனங்களை பார்த்து வருவதாகவும், தனி நபர்களின் விருப்பு வெறுப்பு மற்றும் அவர்களது அரசியல் சார்பின் அடிப்படையில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சினிமாவை ஒரு கலையாக பார்ப்பது குறித்த புத்தகங்கள் தமிழில் குறைவாகவே இருக்கிறது என்றும் கூறினார்.