ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
அபு தாபியில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷ்ரேயஸ் ஐயர் அதிகப்பட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
எளிய இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள், டெல்லி அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை எடுத்த ராஜஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.