ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் மிதவை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், இயந்திரங்கள் தீயில் கருகின.
கும்பாபிஷேகம் என்ற பகுதியில் அமைந்துள்ள ஜி.எம்.ஆர் ஆற்றல் குழுமத்துக்குச் சொந்தமான இந்த மிதவை மின் உற்பத்தி நிலையம் கடந்த 2013ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது.
தற்போது அங்கு செயல்படாத இயந்திரங்கள், தளவாடங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை வெல்டிங் இயந்திரத்தை கையாளும்போது, மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்ததாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. பல மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.