புழுதி புயல் காரணமாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் போட தாமதமான நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தோனி மற்றும் விராட் கோலி மகிழ்ச்சியுடன் உரையாடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போட இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வந்த நிலையில், அப்போது அங்கு வீசிய புழுதி புயல் காரணமாக டாஸ் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது மைதானத்தில் நின்றுகொண்டிருந்த தோனி மற்றும் விராட் கோலி புழுதி புயலை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியுடன் உரையாடினர்.