சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட 5 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையின் 1990-ஆம் ஆண்டு பேட்ச் பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன் டி.ஜி.பி.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் டி.ஜி.பி. பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பணியிடங்களில் நியமிடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக காவல்துறையில் 10 டி.ஜி.பி.க்கள் உள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளவர்களையும் சேர்த்து மொத்தம் 15 ஆக உயர்ந்துள்ளது.