மும்பையை அடுத்த தானே பகுதியில் பதின்பருவ சிறுமியை மிரட்டி பலமுறை பலமாதங்களாக பாலியல் கொடுமையில் ஈடுபட்ட விவகாரத்தில் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயது சிறுமியுடன் பழகிய ஒருவன் அவரை வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.கடந்த 9 மாதங்களாக அவனும் அவன் கூட்டாளிகளும் மிரட்டியே அந்த சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
தன்னை சிதைத்த அத்தனை பேரையும் சிறுமி அடையாளம் காட்டியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.