அனைத்து மொபைல் ஸ்மார்ட் போன்கள், டேப்லட்டுகள், கேமராக்கள், ஹெட்போன்கள், போர்ட்டபல் ஸ்பீக்கர்கள், வீடியோ கேம் சாதனங்கள் போன்ற அனைத்துக்கும் ஒரே பொதுவான சார்ஜரை அறிமுகம் செய்ய ஐரோப்பிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
இத்திட்டத்திற்கு ஆப்பிள் நிறுவனத்தை குறி வைத்து மட்டும் இந்தப் பரிந்துரை செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள ஐரோப்பிய கமிஷன், மற்ற நிறுவனங்களுடன் பத்து ஆண்டுகளாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது சார்ஜர்களின் எண்ணிக்கை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரே சார்ஜர் இருப்பது வசதியானது தான் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது.