கொரோனாவின் மரபணு மாற்ற வடிவமான டெல்டா வைரஸ் உலக அளவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், ஆல்பா, பீட்டா, காமா ஆகிய கொரோனா வைரஸ் ரகங்களை அது ஓரங்கட்டி விட்டதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக கலந்துரையாடல் ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், ஆல்பா, பீட்டா, காமா வைரசுகள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே தற்போது பரவுவதாக கூறினார். இதுவரை டெல்டா மரபணு மாற்ற வைரஸ்185 நாடுகளில் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது அலைக்கும், அமெரிக்காவில் கொரோனா தொற்று மளமளவென உயர்வதற்கும் இந்த வைரசே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. B.1.617.2 எனவும் அழைக்கப்படும் டெல்டா வைரஸ் தொற்று, 2020 ன் பிற்பகுதியில் முதன்முதலாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.