ஏழை நாடுகளுக்கு பைசர் நிறுவனத்தின் 50 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளை அமெரிக்கா நன்கொடையாக வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த வருமானம், நடுத்தர வருமானமுள்ள நாடுகளுக்கு 50 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை நன்கொடையாக வழங்கப் பைசர் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை வியாழனன்று அதிபர் ஜோ பைடன் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் உலக நாடுகளுக்கு 80 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.