நடிகர் சிலம்பரசன் சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் உலக ரோஜா தினத்தை கொண்டாடினார்.
தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடைப்பிடிக்கப்படும் "உலக ரோஜா தினம்" அனுசரிக்கப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிம்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் ரோஜா மலர்களை வழங்கினார். மேலும் சிறுவர்களுடன் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில், திரைப்படங்களில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிப்பீர்களா என கேள்வி எழுப்ப பட்ட போது பதில் அளிக்காமல் செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.