புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்எல்ஏ செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
புதுச்சேரியில் முதல் முறையாக மாநிலங்களவை எம்பி இடத்தில் பாஜக போட்டி இன்றி தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.