தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கணேசர் கோயிலில் விநாயகர் சதூர்த்திக்கு படைக்கப்பட்ட லட்டு சுமார் 19லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஏலம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் 18லட்சத்து90ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு லட்டு ஏலம் போனது.
ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர்.